அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை...!


அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை...!
x

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை,

வரும் 23ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும்.

எனவே தமிழக அரசு கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளது. ஏற்கனவே சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு பஸ்கள் நாளை முதல் 22 ம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் வார விடுமுறையையும் எடுக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விடுப்பு எடுத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story