அரசு பள்ளி சத்துணவு பெண் ஊழியர் கட்டையால் தாக்கி கொலை


அரசு பள்ளி சத்துணவு பெண் ஊழியர் கட்டையால் தாக்கி கொலை
x

வீட்டில் தனியாக இருந்த நாகராணியை மரக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு பள்ளி சத்துணவு பெண் ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் மகளின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

காமராஜர் நகரைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் நாகராணி என்பவர் தனது வீட்டின் பின்புறம் இரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நாகராணியின் மகள் மாசிலாமணி, முருகேசன் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாசிலாமணி திடீரென பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த முருகேசன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனியாக இருந்த நாகராணியை மரக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story