எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலத்தில் உள்ள தனது வீட்டில் 70 கிலோ கேக்கை வெட்டி எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை கொண்டாடினார். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்"இவ்வாறு கூறியுள்ளார்.