சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை


சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த  மழை
x
தினத்தந்தி 13 Jun 2023 7:57 PM GMT (Updated: 14 Jun 2023 8:06 AM GMT)

சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் அளவு 99.9 ஆக பதிவாகி இருந்தது. இரவு 7.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூர், மேட்டூரில் தலா 10.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காடையாம்பட்டி - 7, ஆத்தூர்-5.6, ஓமலூர்-4, சேலம்-3.4, வீரகனூர்-3.


Next Story