சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி
வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தீவிரம் அடைந்திருக்கிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தீவிரம் அடைந்திருக்கிறது. ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆர்.ஏ புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story