கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
சென்னை,
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து மாவட்ட கலெக்ட்ர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது .
மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது