சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை - 25 விமானங்கள் தாமதம்


சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை - 25 விமானங்கள் தாமதம்
x

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்கள் புறப்படவும், 12 விமானங்கள் தரையிறங்கவும் தாமதமானது.

சென்னை,

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் இருந்து டெல்லி, புனே, மலேசியா, சிங்கப்பூர், பேங்காக், கொழும்பு செல்ல இருந்த 13 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக புறப்பட்டு செல்லவில்லை. வானிலை சீரானதும் விமானங்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதே போல் மலேசியா, ஐதராபாத், டெல்லி, பேங்காக்கில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு, வானிலை சரியானதும் விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டன. அதே நேரத்தில் ஜெர்மனி பிராங்ஃப்ரூட்டில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story