திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
x

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு உள்ளார்.

திருவாரூர்,

நாளை மாசி மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு உள்ளார்.


Next Story