வீடுகளில் தொடர் கொள்ளை: முககவசம் அணிந்து திருடிய அண்ணன், தம்பி கைது


வீடுகளில் தொடர் கொள்ளை: முககவசம் அணிந்து திருடிய அண்ணன், தம்பி கைது
x

வீடுகளில் முககவசம் அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, முககவசம் அணிந்த 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து முககவசம் அணிந்து சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மதுரவாயல், நொளம்பூரை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ரமேஷ் (வயது 45), உதயா (40) என்பதும் அண்ணன், தம்பிகளான இவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக முககவசம் அணிந்து பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story