பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2023 9:17 AM IST (Updated: 11 Sept 2023 12:46 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story