மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி அருகே அலமேலுமங்கைபுரம், சக்கமாள்புரம், கொட்டமடக்கிபட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, அண்ணா பூரணியாபுரம், துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, கஸ்தூரி ரெங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விளை நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்களுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். துலுக்கன்குறிச்சியில் உள்ள சொக்கான் ஆசாரி ஊருணி நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாத்தி கட்டும்பணி, களை எடுக்கும் பணி, உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்கடந்த வாரம் வரை மழை பெய்யாமல் பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. திடீரென பெய்த மழை காரணமாக பயிர்கள்செழித்து வளர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதலால் இந்த பயிர்களை தொடர்ந்து காப்பாற்ற நுண்ணூட்ட உரங்கள் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story