அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 2 Jan 2024 5:01 PM IST (Updated: 2 Jan 2024 5:04 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னை,

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும், பல திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா குழு நிர்வாகிகள் பிரகாஷ், ராமராஜசேகர், ராம்குமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.


Next Story