"அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பது சரியல்ல.." முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுகவுக்கு வசீகரமும், சரியான தலைமையும் தற்போது இல்லை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியிருந்தார். மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா உடனான அதிமுகவினர் சந்திப்பை பாஜக நிர்வாகிகள் அதிமுகவை விமர்சித்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறும்போது; அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பது சரியல்ல. விமர்சிக்கும் பாஜக நிர்வாகிகளை அண்ணாமலை கண்டிக்க வேண்டும்.
அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம். இவ்வாறு ஜெயகுமார் பேசினார்.
Related Tags :
Next Story