தஞ்சை புத்தகத் திருவிழா: மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பிதல் வெளியீடு


தஞ்சை புத்தகத் திருவிழா: மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பிதல் வெளியீடு
x

தஞ்சையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை அரண்மனை வளாகத்தில் வரும் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புத்தகத்திருவிழா தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த புத்தகத்திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத்திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

புத்தகத்திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து நகைச்சுவை- சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது. புத்தகத்திருவிழாவில் 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலாளர் முருகன், என்ஜினீயர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story