கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு


கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிபூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மா.பொ.சி நகரில் வசித்து வருபவர் நாசர் (வயது 55). ஆட்டோ டிரைவர். கடந்த 14-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நேற்று வீடு திரும்பிய நாசருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதை கண்டு வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அரை பவுன் தங்க நகை, மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story