நகை திருட்டு
ராஜபாளையத்தில் நகையை திருடி சென்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாலையம்மாள் (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மானாமதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மகாதேவி என்பவர் மாலையம்மாளுக்கு போன் செய்து உங்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 69 கிராம் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story