பழனியில் அரசு மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகைகள் கொள்ளை - ஒருவர் கைது


பழனியில் அரசு மருத்துவரை கட்டிப்போட்டு 100 சவரன் நகைகள் கொள்ளை - ஒருவர் கைது
x

அரசு மருத்துவரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்,

பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் உதயகுமார். இவர் அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி, உதயகுமாரை கட்டிப்போட்டு அவரது வீட்டில் இருந்து 100 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி பொருட்கள், 24 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார், சரவணன் என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்து 34 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கட்டுகள், 7 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story