காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி


காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது.

காஞ்சிபுரம்

அமைதி பேரணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வேடம் அணிந்த பலரும் பங்கேற்றனர்.

காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் பகுதியில் தொடங்கிய அமைதி பேரணி, தேரடி, ரங்கசாமிகுளம் வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவு பெற்றது. அங்கு அண்ணா மற்றும் கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி பஜார் வீதியில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றப்பட்டது. இதில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம். மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் வார்டு உறுப்பினர்கள் பாஸ்கரன், குமரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story