சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளியால் இடையூறு - போலீஸ் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளியால் இடையூறு - போலீஸ் விசாரணை
x

ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு செய்த போது, பழவந்தாங்கல் பகுதியில் இருந்து லேசர் ஒளி வந்திருப்பது தெரிய வந்தது.

சென்னை,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானம் படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்துக் கொண்டு தாழ்வாக பறக்கத் தொடங்கியது.

அப்போது விமானத்தின் முன்பகுதியில் விமானியின் அறையை நோக்கி லேசர் ஒளி பாய்ந்தது. அந்த ஒளி விமானியின் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இது தொடர்பாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு செய்த போது, பழவந்தாங்கல் பகுதியில் இருந்து லேசர் ஒளி வந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார் லேசர் ஒளியை அடித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story