மக்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
சென்னை,
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில், 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது. மக்களவைத்தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பமனு அளித்த கனிமொழி எம்.பி.யிடம் நேர்காணல் நிறைவுபெற்றது. தூத்துக்குடியில் கனிமொழியைத்தவிர யாரும் விருப்ப மனு அளிக்காத நிலையில் நேர்காணல் நடைபெற்றது.
நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறவில்லை.