நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு? முழு விவரம்
x
தினத்தந்தி 20 April 2024 7:09 AM GMT (Updated: 1 May 2024 11:37 AM GMT)

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று (19ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு என்பதில் தொடக்கம் முதலே குழப்பம் நீடித்து வந்தது.

தேர்தல் நடைபெற்ற நாளான 19ம் தேதி (நேற்று) மாலை 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, தேர்தல் நடைபெற்ற மறுநாளான 20ம் தேதி (இன்று) தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர், 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 69.94 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதத்தை பார்க்கலாம்:

* அரக்கோணம் - 74.19

* ஆரணி - 75.76

* மத்திய சென்னை - 53.96

* வட சென்னை - 60.11

* தென் சென்னை - 54.17

* சிதம்பரம் - 76.37

* கோவை - 64.89

* கடலூர் - 72.57

* தருமபுரி - 81.20

* திண்டுக்கல் - 71.14

* ஈரோடு - 70.59

* கள்ளக்குறிச்சி - 79.21

* காஞ்சிபுரம் - 71.68

* கன்னியாகுமரி - 65.44

* கரூர் - 78.70

* கிருஷ்ணகிரி - 71.50

* மதுரை - 62.04

* மயிலாடுதுறை - 70.09

* நாகப்பட்டினம் - 71.94

* நாமக்கல் - 78.21

* நீலகிரி - 70.95

* பெரம்பலூர் - 77.43

* பொள்ளாச்சி - 70.41

* ராமநாதபுரம் - 68.19

* சேலம் - 78.16

* சிவகங்கை - 64.26

* ஸ்ரீபெரும்புதூர் - 60.25

* தென்காசி - 67.65

* தஞ்சாவூர் - 68.27

* தேனி - 69.84

* தூத்துக்குடி - 66.88

* திருச்சி - 67.51

* திருநெல்வேலி - 64.10

* திருப்பூர் - 70.62

* திருவள்ளூர் - 68.59

* திருவண்ணாமலை - 74.24

* வேலூர் - 73.53

* விழுப்புரம் - 76.52

* விருதுநகர் - 70.22


Next Story