தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.
சென்னை,
மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். மம்தா பானர்ஜியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன் ஆடை அணிவித்து வரவேற்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story