மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் எதிரொலி:மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் எதிரொலி:மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் எதிரொலியால் மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை,

மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பலர் பலியாகினர். இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் 'வீடியோ' காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கு தடை உத்தரவு அமலில் இருந்து வரும் வேளையில் இங்கு தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட யாராவது வருகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story