மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி,

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்கள் மற்றும் இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவங்களை கண்டித்தும், மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்த்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் கண்டன உரையாற்றினார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைபோல மணிப்பூர் கலவரம் மற்றும் அங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story