நெல்லையில் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா - சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு


நெல்லையில் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா - சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
x

ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.

நெல்லை,

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினர்.
Next Story