மயிலாடுதுறை பட்டாசு கடை விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு


மயிலாடுதுறை பட்டாசு கடை விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 3:27 PM GMT (Updated: 4 Oct 2023 3:31 PM GMT)

பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இன்று வெடிகளை பார்சல் செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மாணிக்கம், மகேஷ், மதன் மற்றும் ராகவன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story