சென்னை அருகே சுரங்கப் பணி: திருப்பதி, பெங்களூரு செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து


சென்னை அருகே சுரங்கப் பணி: திருப்பதி, பெங்களூரு செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
x

கோப்புப்படம்

ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர். பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (16203), திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16204), சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021), மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) உள்பட 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இது தவிர, 6 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story