திருத்தணி ரெயில் தண்டவாளம் அருகே குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு


திருத்தணி ரெயில் தண்டவாளம் அருகே குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு
x

ரெயில் தண்டவாளம் அருகே குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருவள்ளூர்

திருத்தணி பஜார் பகுதியில் இயங்கி வரும் தானியங்கி ரெயில்வே கேட்டில் இருந்து மேட்டுத் தெரு தானியங்கி ரெயில்வே கேட்டிற்கு செல்லும் என்.எஸ்.சி. போஸ் சாலையோரம் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே சிலர் குப்பைகள் மற்றும் மரக்கட்டைகளை போட்டு வைத்திருந்தனர். நகராட்சி ஊழியர்கள் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்பட்டது. நேற்று நண்பகலில் மர்ம நபர்கள் குப்பையில் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் தீ மளமளவென பரவி கரும்புகை ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story