சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மிதமான மழை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.
சென்னை,
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (8.11.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. இதில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், காமராஜர் சாலை, கோபாலபுரம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
Related Tags :
Next Story