மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு


மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2023 9:53 PM IST (Updated: 15 Jun 2023 2:59 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 42). இவர், புலிவலம் பஸ் நிறுத்தம் அருகே மொபட்டில் வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், முரளி ஓட்டிச்சென்ற மொட்டும் மோதிக்கொண்டன.

இதில் அவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story