பெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு


பெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு
x

மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்திருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை:

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நடத்தப்படுகிறது. அவ்வகையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குத்தான் கொடுத்துள்ளோம். வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால் பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story