கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்


கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
x

மழை வேண்டி கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கோவை,

தமிழகத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் தினசரி வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மழை வேண்டி கோவையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இந்த சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மழைக்காக பிரார்த்தனை செய்தனர்.



1 More update

Next Story