வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்கு வந்த நடராஜர் சிலை !


வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்கு வந்த நடராஜர் சிலை !
x

1966 - 1974 கால கட்டத்தில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது .

தஞ்சாவூர்,

இந்தியாவில் இருந்து கடத்தி வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட பழமை வாய்ந்த சாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் தொல்பொருள் ஆய்வாளர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கொண்டுவரப்பட்டது. இதில் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவிலுக்கு கொண்டுவந்தனர்.

கடந்த 1966 - 1974 கால கட்டத்தில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து நடராஜர் சிலை கானாமல் போனது. இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிலை மீட்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கே கொண்டுவரப்பட்டு உள்ளது.

சிலை வந்ததையொட்டி கோவிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிலை வந்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சிலைக்கு அலங்காரம் செய்து பள்ளக்கில் சுமந்தவாறு கோவிலுக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.


Next Story