தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
x
தினத்தந்தி 4 Feb 2024 5:45 AM GMT (Updated: 4 Feb 2024 6:10 AM GMT)

விருப்ப தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - சி.பி.எம். இடையேயான நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவுடன், சி.பி.எம். கட்சி உறுப்பினர்கள் சம்பத், சண்முகம், கனகராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 விருப்ப தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தைக்குப்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. இரு தரப்பினரும் மனம் திறந்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story