சாராயம் விற்ற அண்ணன்-தம்பி கைது


சாராயம் விற்ற அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணாநகரில் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வீட்டில் வைத்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல மயிலாடுதுறை திருவிழந்தூர் தீபாய்ந்தம்மன் கோவில் அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட விஜயேந்திரனின் மற்றொரு மகன் சத்யஜோதி (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அஜித்குமார், சத்யஜோதி ஆகிய 2 பேரும் அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story