நீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து


நீலகிரி மலை ரெயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து
x

மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ந்தேதி முதல் மலை ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது.

நீலகிரி,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மலை சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் மலை ரயில் சேவை இயங்காது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ந்தேதி முதல் மலை ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பாதை சரிசெய்யப்பட்டு நேற்று முதல் மலை ரெயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மீண்டும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story