நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்


நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்
x

வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை

சென்னை பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன்.

மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலை பகிர்ந்து கொள்வேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நித்யானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story