பா.ஜ.க.வில் இருந்து வெளியேறியது, தன்னிச்சையான முடிவு - நிர்மல்குமார் பேட்டி


பா.ஜ.க.வில் இருந்து வெளியேறியது, தன்னிச்சையான முடிவு - நிர்மல்குமார் பேட்டி
x

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் பா.ஜ.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்த நிர்மல்குமார் பேசுகிறார்.

அதில் அவர் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறியது பற்றியும், பா.ஜ.க.வின் ஆடியோ கலாசாரம் குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, பா.ஜ.க.வில் இருந்து வெளியறியது, நான் நன்கு சிந்தித்து எடுத்த தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டுவதாக கூறுவது தவறு. நான் ராஜினாமா செய்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவே நேரம் கேட்டேன்.

பா.ஜ.க.வில் நிலவும் ஆடியோ கலாசாரம் தவறான அணுகுமுறை. இதுபற்றி நான் கட்சியில் இருந்த போது நடந்த பல்வேறு கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஆட்டுவிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் இணைந்து இருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் தேர்தலில் கூட்டணி தொடர்ந்தால், அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்பது உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.


Next Story