எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது-கனிமொழி எம்.பி. பேச்சு


எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது-கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2023 1:21 AM IST (Updated: 22 Jun 2023 5:28 PM IST)
t-max-icont-min-icon

எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி மற்றும் 100 அடி உயரம் அமைக்கப்பட்டு இருந்த கட்சி கொடி கம்பம், கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் 100 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து விட்டு கனிமொழி கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் மேம்படுத்திட கருணாநிதி எண்ணற்ற திட்டங்களை தீட்டினார். கொள்கையோடு இருக்கும் தி.மு.க.வை சிலர் சீண்டிப்பார்க்கிறார்கள், அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story