வடகிழக்கு பருவமழை: காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு


வடகிழக்கு பருவமழை: காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
x

கனமழை பெய்தபோதும் சென்னையில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்கவில்லை.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மற்ற மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை எதிரொலியால் 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது.

ஒவ்வொரு மாநில பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 என்ற விகிதத்தில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர். மணிமுத்தாறு, கோவை புதூர், பழனி, ஆவடி ஆகிய பகுதிகளுக்கு தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.

1 More update

Next Story