திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 61). இவர் நேற்று முன்தினம் மணவாளநகர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் வசிக்கும் தம்பி மகளின் திருமணத்திற்காக சென்றார். இரவு அங்கு தங்கி விட்டு நேற்று காலையில் ஒண்டிக்குப்பத்தில் இருந்து மணவாளநகர் பகுதியில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

சாலையை கடக்கும்போது பூந்தமல்லி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த முனியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story