திறக்கப்பட்ட அணைகள்... ஆர்ப்பரிக்கும் வெள்ளம்- குமரியில் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது.
கன்னியாகுமரி,
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது.
மேலும், மாவட்டத்தின் முக்கிய அணைகளில் இருந்து 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பழைய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் தேவையில்லாமல் இறங்கவேண்டாம் என 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story