மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை


மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மது குடிக்க தாய் பணம் தராததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு மெயின் தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் என்கின்ற குட்டி (வயது 32). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் அன்னக்கிளி உடன் இவர் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் ராதாகிருஷ்ணன், தாய் அன்னக்கிளிடம் மது குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அன்னக்கிளி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). இவர் கே.ஜி. கண்டிகையில் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரசாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் பிரசாந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பிரசாந்தின் தந்தை வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story