பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
x

மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை ,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் 57 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் அமன் ஷெராவத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

21 வயது 24 நாள்களில் இந்த சாதனையை படைத்திருப்பதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் நீண்ட எதிர்காலம் கொண்ட அவர், மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story