"திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம்" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
x

திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யகொண்டான் திருமலை பகுதியில் சுமார் 51 செண்ட் நிலத்தில் 100 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி சத்யநாராயாண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்றி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டிடம் முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து நிறைவு சான்றிதழ் பெற்றால் தான் மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அனுமதியின்றி கட்டிடம் கட்டினாலே அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், நகரத்தில் திட்டமிட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கில் திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பான அறிக்கையை வரும் 10-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story