மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு


மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 26 Sep 2023 5:39 AM GMT (Updated: 26 Sep 2023 7:53 AM GMT)

மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

"ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு தேர்வை எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story