கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு


கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 3 Dec 2023 2:18 AM GMT (Updated: 3 Dec 2023 5:24 AM GMT)

வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஆவணங்களை ஒப்படைத்தது.

சென்னை,

கிண்டியில் கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபரில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை கைதுசெய்த போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்ட நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஒப்படைத்தது.


Next Story