திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்கள் புகை ப்பட கண்காட்சி திறப்பு விழா நடை பெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படங்கள் என 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியை திரளான பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) எபினேசன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்தானலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, அலுவலக மேலாளர் (பொது) கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Next Story