ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சம் திருடிய பிக்பாக்கெட் ராணிகள் கைது


ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சம் திருடிய பிக்பாக்கெட் ராணிகள் கைது
x

சென்னையில் ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சம் திருடிய பிக்பாக்கெட் ராணிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், நகை வாங்குவதற்காக தனது மனைவியுடன் தியாகராயநகருக்கு 12-பி மாநகர பஸ்சில் சென்றார். நகை வாங்குவதற்காக ஒரு பையில் ரூ.2½ லட்சம் பணம் வைத்திருந்தார். தியாகராய நகரில் பஸ்சை விட்டு இயங்கியபோது, அவர் பையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தையும் காணவில்லை. யாரோ திருடிவிட்டனர்.

ஓடும் பஸ்சில் ரூ.2½ லட்சத்தை பறிகொடுத்த விஜயகுமார் தம்பதி பதறினார்கள். இது குறித்து மாம்பலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். பஸ்சில் விஜயகுமார் தம்பதியுடன் ஒட்டி உரசியபடி வந்த 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தியாகராயநகர் வரும் முன்பே பஸ்சை விட்டு இறங்கிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். உடனடியாக களத்தில் இறங்கி, பிரபல பிக்பாக்கெட் ராணிகளான பரமக்குடி கவிதா (வயது 45), ரேகா (43) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் பிக்பாக்கெட் அடிப்பதை தங்களது தொழிலாக செய்து வருபவர்கள். சிறை பறவைகளான இவர்கள் இருவரிடமும், விஜயகுமார் தம்பதி பறிகொடுத்த பணம் மீட்கப்பட்டது.


Next Story