விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

சென்னையில் சுமார் 4 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த முறையும் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் சுமார் 4 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசாரும், அதே போல் தாம்பரம், ஆவடியில் 10 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story